Saturday, June 27, 2009

ரகசியங்கள் !!!

பாத்துக்கோ பாத்துக்கோ நானும் தொடர் சங்கிலி இடுகை எழுதியிருக்கேன்.... (வ்டிவேலு பாணியில் படிப்பதும், சரவணா ஸ்டோர்ஸின் விளம்பரப்பட பாணியில் படிப்பதும் உங்களின் விருப்பத்திற்க்கு விடப்படுகிறது!!!)


1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

பிடிக்கும். கல்கி என்றால் தன்னைத்தானே செதுக்கும் சிற்பத்தின் பெயர் என்று என் தோழி சொன்னது. கல்லூரிக்காலம் முதலே இந்தப் பெயரில் ஈடுபாடு உண்டு. அதனால் நானே வைத்துக் கொண்டது.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

அதெல்லாம் கணக்குல வைக்க முடியாதுங்க... ரொம்ப மனசைத் தொடுறா மாதிரி பாட்டு கேட்டாக்கூட அழுகை வரும். இப்போதான் டி.வில டெமி லொவேட்டோ கண்ணு கலங்குனதப் பாத்து நானும் அழுதுட்டு வரேன். :-)

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

எனக்கு பிடிக்கும். (மத்தவங்க படிக்கிறதுதான் கொஞ்சம் கஷ்டம். 15 பேப்பர் இருக்குற அஸைன்மென்ட 5 பேப்பர்ல எழுதுறவங்க நாங்க. )

4. பிடித்த மதிய உணவு என்ன?

வீட்டில் என்றால், அப்பா வைக்கும் சாம்பாரும், அம்மா வைக்கும் அவியலும்.

சென்னையில் இருந்தவரை அஞ்சப்பரின் பிரியாணியும், சிக்கன் 65/பிங்கர் பிஷ்

இப்போ நான் சமைக்கும் எல்லாமே (நம்ம சமைச்சது நமக்கே புடிக்கலின்னா வேற யாருக்கு புடிக்கும்??)

5. நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

ம்ம்ம்ம்... வச்சிக்குவேன்.

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

ரெண்டுமே...ஆனா அருவிக்குத்தான் முதல் இடம். கடலில் என்றால் அது எந்த அளவுக்கு குப்பை இல்லாமல் இருக்கிறது என்பதைப் பொறுத்து.

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முதலில் அவர்கள் நம்மை எப்படி பார்க்கிறார்கள் என்பதை. அடுத்தது அவர்களின் உடல் மொழியை.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்சது: யார் நல்லது சொன்னாலும் மனசுல வாங்கிட்டு அதுபடி நடக்க முயற்சி பண்ணுறது. முடிஞ்சவரைக்கும் கூட இருக்குறவங்களுக்கு உண்மையா இருக்குறது.

பிடிக்காதது: யார்கிட்டயாவது தோணுனதை சொல்லுறேன்னு போய் வாங்கிக் கட்டிக்கிறது.

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்தது: பொறுமை

பிடிக்காதது: -------------- (அப்புறமா நிரப்பிக்கலாம், பொறந்த நாள் வருது, ஒரு பெரிய லிஸ்டே வச்சிருக்கேன், இப்ப எதையாவது சொல்லி அதைக் கெடுக்கணுமா? :-))

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

ம்ம்ம்ம்... வருத்தமெல்லாம் இல்லீங்க... சில நேரங்களில் பிரிவுகள்தான் உறவுகளை வலுவாக்கும்.

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

வயலெட் நிற நைட்டி.

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

மானிட்டர் பாத்து டைப் பண்ணிட்டு இருக்கேன். (இப்போதைக்கு பாட்டு எதுவும் போடலை)

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கருப்புத்தான்..

14. பிடித்த மணம்?

ரோஜாப்பூ மணம்


15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

நிறைய பதிவர்கள் பிடிக்கும். எல்லோருமே இந்த தொடர் விளையாட்டை பெரும்பாலும் முடித்து விட்டார்கள். இன்னும் அனுமதி கேட்கவில்லை, இருந்தாலும் அழைப்பது ஷண்முகப்பிரியன் சார் அவர்களை. எதிர்மறையான விமர்சனங்களையும் நல்ல விதத்தில் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை நாம் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

(சார் உங்களிடம் கேட்காமலேயே தொடர் விளையாட்டுக்கு அழைத்ததற்க்கு மன்னிக்கவும்.)

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

அக்பர் அண்ணன். இப்போதான் எழுத ஆரம்பித்திருக்கிறார். இரண்டு வருடங்கள் வாசகனாக இருந்த அனுபவத்தினால் இன்னும் நல்ல படைப்புகள் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.


17. பிடித்த விளையாட்டு?

இறகுப்பந்து, கைப்பந்து, சதுரங்கம்.

18. கண்ணாடி அணிபவரா?

வெயிலுக்கு குளிர்க்கண்ணாடி அணியும் பழக்கம் உண்டு.

19. எப்படிப்பட்ட திரைப் படம் பிடிக்கும்?

நகைச்சுவை & உணர்வுப்பூர்வமாக ஈர்க்கும் படம்.

20. கடைசியாகப் பார்த்த படம்?

இணையத்தில் அயன்,
தியேட்டரில், ஏஞ்சல்ஸ்&டீமோன்ஸ்

21. பிடித்த பருவ காலம் எது?

ம்ம்ம்ம். பள்ளிக்காலம் வரை மழைக்காலம்தான். (மழை வந்தால் எங்க ஸ்கூல் லீவு விட்டுடுவாங்க)
இப்போ எல்லாமே பிடிக்குது, எல்லா பருவ காலங்களும் ஒவ்வொரு விதத்துல அழகாத்தெரியுது.

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

புத்தகம் படிச்சு ரொம்ப நாளாச்சு . இப்போதைக்கு பதிவுலகம் மட்டும்தான்

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?

இப்போது உபயோகிப்பது கணவரின் அலுவலக மடிக்கணினி, அதனால் படம் எதுவும் வைக்கவில்லை.
என்னுடைய மடிக்கணினி இருந்தபோது, என்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் எடுத்ததும் மாற்றிவிடுவேன்.


24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்தது:: இரைச்சலில்லாத எல்லா சத்தமும்.

பிடிக்காதது: காலையில் அடிக்கும் அலாரம் சத்தம்


25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

அமெரிக்கா வரை.


26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

அப்படி எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எல்லோரையும் போல சாதாரண வழக்கமான செயல்கள்தான்.
27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

கூடயே இருந்து குழி பறிக்கிறது
28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம் , பிடிவாதம்.
29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

கேரளா (இன்னும் போனதில்லை)

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

நல்லவர்கள் புடைசூழ, பிரச்சனையே இல்லாத வாழ்க்கை வாழணும்ன்னு ஆசை.

31.கணவன்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

வீட்டை சுத்தம் பண்ணுவது. (தலைவர் வீட்டுல இருந்தா சுத்தம் பண்ணுறது வேஸ்ட். 10 நிமிஷத்துல பழைய நிலைமைக்கு வந்துடும்)

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும்,
போர்க்களங்கள் மாறலாம் போர்கள் மாறுமா!!!

(இது சினிமா டயலாக்ன்னு தெரியாம சின்ன வயசுல சொல்லிட்டு திரிஞ்சிருக்கேன். ஆனா ரொம்ப பிடிச்ச வரிகள்.)

P.S: பதில்களை படித்துவிட்டு நாராயணா இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலடான்னு புலம்புகிறவர்கள், ஒரு சின்ன டைவர்சன் எடுத்து அக்பர் அண்ணனின் வலைத்தளத்தில் போய் திட்டுங்கள். அவர்தான் என்னை எழுத சொன்னது. :-)

16 comments:

பழமைபேசி said...

//நானும் தொடர் பதிவு எழுதியிருக்கேன்.... //

சங்கிலித் தொடர் இடுகை!

http://maniyinpakkam.blogspot.com/2009/03/blog-post_4231.html

எம்.ரிஷான் ஷெரீப் said...

அட..இது நல்லாருக்கே :)

குறை ஒன்றும் இல்லை !!! said...

கவுண்டர் : நாராயணா.. இந்தமாதிரி ஆஃபீஸ் கம்ப்பூட்டர பதிவெழுத யூஸ் பண்ணா அப்புறம் இந்தியா எப்படிடா வல்லரசாகும்?

கல்கி said...

@ பழமைபேசி,


விளக்கத்திற்க்கும், சுட்டிக்காட்டியதற்க்கும் நன்றி அண்ணா.
இடுகையிலயும் திருத்தியாச்சு :-)

கல்கி said...

@ எம்.ரிஷான் ஷெரீப்

வாங்கண்ணே

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :-)

கல்கி said...

வாங்க குறை ஒன்றும் இல்லை !!!

//கவுண்டர் : நாராயணா.. இந்தமாதிரி ஆஃபீஸ் கம்ப்பூட்டர பதிவெழுத யூஸ் பண்ணா அப்புறம் இந்தியா எப்படிடா வல்லரசாகும்?//


கிளையன்ட் கொடுத்ததுதான். இதனால இந்தியா வல்லரசாகுறதுல பிரச்சனை எதுவும் இருக்காதுன்னு நெனைக்கிறேன்... :-)

ஷண்முகப்ரியன் said...

நிறைய பதிவர்கள் பிடிக்கும். எல்லோருமே இந்த தொடர் விளையாட்டை பெரும்பாலும் முடித்து விட்டார்கள். இன்னும் அனுமதி கேட்கவில்லை, இருந்தாலும் அழைப்பது ஷண்முகப்பிரியன் சார் அவர்களை. எதிர்மறையான விமர்சனங்களையும் நல்ல விதத்தில் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை நாம் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். //

உங்களின் நல்ல வார்த்தைகளுக்கு நன்றி,கல்கி.உங்களைப் போலவே என் மேல் அன்பு கொண்ட நிறைய நண்பர்கள் என்னை இந்தத் தொடர் விளையாட்டுக்கு அழைத்து விட்டார்கள்.
சில விளையாட்டுக்களை விளையாடுவதை விட மைதானத்துக்கு வெளியே இருந்து கைதட்டி ரசிப்பதுதான் முறை.
இந்த விளையாட்டிலும் மைதானத்துக்கு வெளியே இருக்கவே விரும்புகிறேன்.

Anyway, உங்கள் நல்லெண்ணத்துக்கு நன்றி கல்கி.

கல்கி said...

@ ஷண்முகப்ரியன்

பதிலளித்ததற்க்கு நன்றி :-)

அக்பர் said...

// அக்பர் அண்ணன். இப்போதான் எழுத ஆரம்பித்திருக்கிறார். இரண்டு வருடங்கள் வாசகனாக இருந்த அனுபவத்தினால் இன்னும் நல்ல படைப்புகள் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.//

இந்த ஊர் இன்னுமா நம்மளை நம்பிக்கிட்டிருக்கு(ஆவ்வ்வ்...)
கண்டிப்பாக நல்ல பதிவுகள் எழுத முயற்சி செய்கிறேன் சகோதரி.

//P.S: பதில்களை படித்துவிட்டு நாராயணா இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலடான்னு புலம்புகிறவர்கள், ஒரு சின்ன டைவர்சன் எடுத்து அக்பர் அண்ணனின் வலைத்தளத்தில் போய் திட்டுங்கள். அவர்தான் என்னை எழுத சொன்னது. :-)
//
// கவுண்டர் : நாராயணா.. இந்தமாதிரி ஆஃபீஸ் கம்ப்பூட்டர பதிவெழுத யூஸ் பண்ணா அப்புறம் இந்தியா எப்படிடா வல்லரசாகும்?

//
எப்பூடி. அவ‌ரு ஏற்க‌ன‌வே அட்டாக் கொடுக்கிற‌வ‌ரு அவ‌ர‌ உசுப்பேத்தி உட்டுட்டிங்க‌ளே.

எல்லாமே எதார்த்த‌மான‌ ப‌தில்க‌ள். வாழ்த்துக்க‌ள்.

sarathy said...

//(தலைவர் வீட்டுல இருந்தா சுத்தம் பண்ணுறது வேஸ்ட். 10 நிமிஷத்துல பழைய நிலைமைக்கு வந்துடும்) //

பாவம் தலைவர்..
உங்களின் எல்லா பதிவுகளிலும் அவரின்
image , Total damage.

பழிவாங்கல் நடவடிக்கையா?

கல்கி said...

@ அக்பர்

வாங்கண்ணே...
கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி... :-)

கல்கி said...

@ sarathy

ஹா ஹா ஹா...

அவரும் அதே கடுப்புல தான் இருக்காரு.
வீட்டுல யாரும் அவர எதுவும் சொல்ல மாட்டாங்க, அதுக்காக அப்படியே விட முடியுமா? யாராச்சும் சொல்லணும்ல அதான் நான் சொல்லிகிட்டே இருக்கேன். :-)

sarathy said...

இனிமேல் மடிக்கணினியை அலுவலகத்திலேயே
வச்சிட்டு வர தலைவருக்கு ஐடியா கொடுக்கிறேன்...

கல்கி said...

ஹ்ம்ம்ம்ம்.... இவ்ளோ நல்லவரா நீங்க? :-)

sarathy said...

நன்றி..

அக்பர் said...

த‌ங்க‌ளுக்கு சுவையார்வ பதிவு/பதிவர் விருது கொடுத்துள்ளேன்.

http://sinekithan.blogspot.com/2009/07/blog-post_20.html

ஏற்றுக்கொள்ள‌வும்.

Post a Comment