Friday, June 12, 2009

பொண்ணு/பையன் பாக்குறீங்களா? அப்போ இந்த பதிவையும் பாருங்கோ...!!!

மோகன் அண்ணானோட இந்த பதிவு படிச்சப்புறம் எழுதணும்னு தோணுன பதிவு இது...

பொண்ணு/பையன் பாக்கும் போது நிறைய விஷயங்கள் இருக்கு.

உதாரணத்துக்கு இந்த போன் மேட்டரையே எடுத்துக்குவோம். ரொம்ப வளவளன்னு பேசுறது வெகுளித்தனத்தின் வெளிப்பாடாக்கூட இருக்கலாம். இல்ல அவங்களுக்கு இருக்குற சந்தேகங்களை தீர்த்துக்க கூட இருக்கலாம். போன்ல ரொம்ப ஓவரா கேள்வி கேட்டா அந்த பொண்ணு திமிர் புடிச்ச பொண்ணுன்னோ இல்ல ரொம்ப அடக்கமா பேசுனா ரொம்ப நல்ல பொண்ணுன்னோ தப்பு கணக்கு போடாதீங்க.

கல்யாணத்துக்கு முன்னாடிதான் பையனுக்கு தம்/தண்ணி பழக்கமெல்லாம் இருக்கான்னு கேக்க முடியும். பழக்கம் இருந்தா ஆமான்னு சொல்லிட்டுப்போங்க இல்லன்னா இல்லன்னு சொல்லுங்க...(ஆனா உண்மைய சொல்லுறவங்க ரொம்ப கம்மி :-( ) அத விட்டுட்டு என்னப்பாத்து இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டாளேன்னு டென்சனாகக் கூடாது. ஒருவேளை அந்த பையனுக்கு பழக்கம் இருந்து கல்யாணத்துக்கு அப்புறம் தெரியவந்து, அந்த பொண்ணு ஏதாவது கேட்டா என்ன சொல்லுவீங்க? "இதெல்லாம் நீ கல்யணத்துக்கு முன்னாடியே கேட்டிருக்கணும்"... நிறைய வீட்டுல தன் பையன் தம்/தண்ணி அடிக்கிறதே தெரியாது.!!!


அடுத்த விஷயம் வேலை/படிப்பு, இப்போ இருக்குற நிலமைல கண்டிப்பா கேட்டுத்தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம். முடிஞ்சா டிகிரி முடிச்சி வேலைக்கு சேர்ந்தப்புறம் எந்த அளவு படிக்கிறதுல/ தன்னை மேம்படுத்திக்கிறதுல கவனம் செலுத்தியிருக்கான்னு தெரிஞ்சிக்கணும்.உதாரணத்துக்கு சர்டிபிகேஷன் மாதிரி..

அப்புறம் எதிர்கால திட்டங்கள் பத்தி கூட கேக்கலாம். வெளிநாட்டில் வேலை பாக்குறவங்களா இருந்தா, தற்காலிகமா வெளிநாட்டுல இருக்குறீங்களா இல்ல நிரந்தரமா இருக்க போறீங்களான்னு இப்பவே பேசிக்கலாம்.


அதே மாதிரி பையனும் பொண்ணுகிட்ட சில விஷயங்களை கேட்டு தெளிவு படுத்திக்கணும். உதாரணத்துக்கு சொல்லணும்னா, வேலைக்கு போறது/ படிக்கிறது. சில பெண்கள் கல்யாணத்துக்கு முன்னாடி வேலைக்கு போயிருப்பாங்க, ஒருவேளை கல்யாணத்துக்கு அப்புறம் போகவேண்டாம்ன்னு நெனைக்கலாம். பொண்ணு தேடும்போது வேலைக்கு போகலைன்னாலும் பரவாயில்லான்னு சொல்லிட்டு அப்புறம் அந்த பொண்ணு போகணும்ன்னு எதிர்பாக்ககூடாது. அதனால கல்யாணத்துக்கு முன்னாடியே இதெல்லாம் தெளிவா பேசிடுறது நல்லது.


அடுத்த விஷயம் சமையல், நீங்க நல்லா வாய்க்கு ருசியா சாப்பிடணும்ன்னு நெனைக்கிற ஆளா இருந்தா பொண்ணு சமையல் விஷயத்தில எப்படின்னு தெளிவா கேட்டுக்கோங்க. அந்த பொண்ணுதான்னு முடிவாயிடுச்சுன்னா உங்களுக்கு புடிச்ச சாப்பாட்டு அயிட்டங்களை உங்க அம்மாகிட்ட இருந்து கத்துக்க சொல்லிடுங்க.(என்னதான் அந்த பொண்ணு நல்லா சமைச்சாலும், எங்க அம்மா மாதிரி சமைக்கலன்னு சொல்லுறது ஒரு பேஷனாயிடுச்சு, ஆனா நம்ம அம்மா வயித்துல பொறந்த நம்ம அக்காவும், தங்கச்சியும் சமைக்கிறதே அம்மா சமைக்கிறது போல இல்லையே, வேற வீட்டுல இருந்து வந்த பொண்ணு எப்படி சமைப்பா அப்படின்னு யோசிக்கவே மாட்டாங்க.)

அதே மாதிரி பொண்ணுங்களும் கேக்கலாம், அந்த பையனுக்கு சமையல் ஆர்வம் எல்லாம் எப்படின்னு. எப்பவாவது நம்மளால செய்ய முடியாத நேரத்துல உபயோகமா இருக்கும்.


அடுத்த விஷயம் கடவுள் நம்பிக்கை, பையன் நாத்திகனா இருந்து பொண்ணு ஆத்திகமா இருந்தா பிரச்சனை கம்மி, அதே தலகீழா இருந்ததுன்னா, அந்த பொண்ணு பாவம். படுத்தி எடுத்துடுவாங்க. பையன் கொஞ்சம் முஞ்சிய சீரியஸா வச்சிகிட்டு எனக்கு நம்பிக்கை இல்ல, கட்டாயப்படுத்தாதன்னு சொல்லிட்டா அந்த விஷயத்த பொண்ணுங்க திரும்ப கட்டாயப்படுத்த முடியாது. அதே மாதிரி எல்லாம் பொண்ணுங்க சொல்ல முடியாது, குடும்பத்துக்கு ஏத்த பொண்ணு இல்லன்னு சுலபமா சொல்லிடுவாங்க. அதனால கல்யாணத்துக்கு முன்னாடியே இதப்பத்தி பேசிடுறதும் நல்லது.


அடுத்தது கவனிக்க வேண்டிய விஷயம் குடும்பப்பிண்ணனி, குடும்பத்திலிருப்பவர்கள் பழகும் விதம், நம்ம குடும்பத்துக்கும் நமக்கும் ஒத்துவருமா எல்லாத்தையும் நாமளே அலசி ஆராய்ஞ்சி பாத்துறணும் (இந்த விஷயத்துல வீட்டுல இருக்குறவங்கள நம்பக்கூடாது, கல்யாணத்த பண்ணுறவரைக்கும் சம்பந்திங்களை தூக்கிவச்சிட்டு ஆடுவாங்க, பின்னால பிரச்சனை வரும்போது நாமதான் மண்டைய பிச்சிகிட்டு இருப்போம்.)


இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு, என்னைக்கேட்டா, வரதட்சணை விஷயங்களைக்கூட பொண்ணும் பையனும் பேசிக்கிட்டா தப்பு இல்ல.. இதெல்லாம் பெரியவங்க விஷயம்னு சொல்லுவாங்க, ஆனா பொண்ணுக்குத்தான் டார்ச்சர் கொடுப்பாங்க. (சகோதரிகளே உஷார், இப்போ வரதட்சணைக்கு புது பேர் வச்சிருக்காங்க, "மரியாதை செய்யிறது"ன்னு. நேரடியா இது வேணும் அது வேணும்னு கேக்கமாட்டாங்க, ஆனா அவங்க எதிர்பாத்தது வரலன்னா, மாப்பிள்ளைக்கு மறுவீட்டு மரியாதை, சம்பந்தி மரியாதைன்னு புதுசு புதுசா கண்டுபுடிச்சு கறந்துடுவாங்க.)

பி.கு: இது உண்மையில நடந்ததுங்க, பொண்ணை மட்டும் கொடுங்க வேற எதுவும் வேணாம்ன்னு சொல்லிட்டு, நாத்தனார் மரியாதைன்னு புதுசா ஒண்ணு கண்டுபுடிச்சி ஒரு லட்ச ரூபாய்க்கு நகை வாங்கியிருக்காங்க நாத்தனாருக்கு. இந்த கொடுமையெல்லாம் என்னன்னு சொல்ல.

இவங்க வரதட்சணை வாங்குற டெக்னிக் எல்லாம் இன்னொரு இடுகையிலதான் போடனும் அவ்ளோ இருக்கு. :-)

சரி, பொண்ணு/பையன் பாக்குற விஷயத்துல இவ்ளோதான் இப்போ நியாபகம் இருக்கு. உங்களுக்கு ஏதாவது நியாபகம் வந்தா பின்னூட்டத்துல போடுங்க.

23 comments:

பழமைபேசி said...

//இன்னொரு பதிவுலதான்//

இன்னொரு இடுகையில அப்படீன்னு வரணுமுங்கோ!

FunScribbler said...

உஷ்ஷ்...இப்பவே கண்ண கட்டுதே! இம்புட்டு இருக்கா இதுல...யப்பா சாமி, அதுக்கு கல்யாணமே பண்ணிக்காம இருந்திடலாம்போல தெரியுது!

சு.செந்தில் குமரன் said...

முதல்ல எயிட்ஸ் ஃபிரீ சர்டிஃபிகேட் கேளுங்க!
கெட்ட பழக்கம்னு மட்டும் இல்ல ... தவறான ஊசி , ரத்தம் உள்ளிட்ட பிரச்னைகளாலும் எயிட்ஸ் வரும்னு புரிஞ்சிக்கிட்டா உணர்ச்சி வசப் படாம இதை அணுக முடியும்.www.susenthilkumaran.blogspot.com

மங்களூர் சிவா said...

கண்ணா நீங்க கண்ணாலம் ஆனவரா இல்லை ஆகாதவரான்னு தெரியாது இருந்தாலும் சொல்றேன். இம்புட்டு ஆராய்ச்சி செஞ்சா கண்டிப்பா கண்ணாலம் இந்த ஜென்மத்துல நடக்காது அம்புட்டுதான்
:))))

கல்கி said...

@ பழமைபேசி

//இன்னொரு இடுகையில அப்படீன்னு வரணுமுங்கோ!//
திருத்தியிரலாம்ணே... ஆனா ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்ன்னு புரியல.!!! நேரம் கிடைக்கும் போது சொல்லுங்கண்ணே. :-)

@ தமிழ்மாங்கனி
வாங்க தமிழ்மாங்கனி... நீங்களே இப்படி சொன்னா எப்படி??? :-)

@ சு.செந்தில் குமரன்
வாங்க செந்தில், ரெண்டுபேரும் ஒரு முழு மருத்துவ பரிசோதனை செய்றது அவசியம் தான். :-)

@ மங்களூர் சிவா

வாங்க மங்களூர் சிவா, இதெல்லாம் ஒரு ஆராய்ச்சியா, இன்னொரு விஷயத்தை எழுத மறந்துட்டேன், முடிஞ்சா பையனோட சம்பள விபரத்தையும் கேக்கலாம், அதான் எல்லா க்ம்பெனியிலயும் மாசம் சம்பளம் வரதுக்குள்ள E-Pay statement அனுப்புறான்ல. :-)

கல்கி said...

@ யூர்கன் க்ருகியர்....

வாங்க யூர்கன் க்ருகியர்...
வருகைக்கு நன்றி :-)

ஷண்முகப்ரியன் said...

குற்றம்,குறைகள்,நிறைகள் எல்லாவற்றையும் மீறி,உங்களுக்கு ஒருவரைப் பிடித்திருக்கிறதா?

சகல பரிசீலனைகளையும் தாண்டி அவனது/அவள்து நினைவு முன் மாலைப் பொழுதுகளிலோ,அதிகாலைப் பொழுதுகளிலோ உங்கள் மனதில் வலிக்கிறதா?

எப்படி இருந்தாலும்,என்னவானாலும் அவனை/அவளை நான் எப்போதும் நேசிப்பென் என்று உங்கள் அடிமனம் உங்கள் காதுகளில் கிசுகிசுத்துக் கொண்டே இருக்கிறதா?

காதல் என்ற அந்த மாயம் உங்களுக்குள் நிகழ்கிறதா?

பிறகு திருமணம் செய்து கொள்ளுங்கள்.
பின்னாளில் வரும் ஏமாற்றங்களைத் துணிவுடன் ஏற்றுக் கொள்வீர்கள்,கல்கி.

அறிவும்,ஆராய்ச்சியும் வழியைத் தான் காட்டும்.
உண்மையான உணர்வுதான் புதிய வழிகளையே உருவாக்கும்.

சாரதி said...

இன்னும் ஆறு மாசம் தான் இருக்கு

கல்கி said...

இன்னும் 6 மாசம்தான் இருக்கா உங்க கல்யாணத்துக்கு? வாழ்த்துக்கள் சாரதி. :-)

சென்ஷி said...

//ரொம்ப பெருசா ஒண்ணும் இல்ல... எல்லாரும் மொக்க போடுறாங்களே நம்மளும் போட்டா என்னன்னு தோணுச்சு.... அதான் ஆரம்பிச்சேன்.//


:)))))

கல்கி said...

@ சென்ஷி

வாங்க சென்ஷி :-)

சிநேகிதன் அக்பர் said...

//பி.கு: இது உண்மையில நடந்ததுங்க, பொண்ணை மட்டும் கொடுங்க வேற எதுவும் வேணாம்ன்னு சொல்லிட்டு, நாத்தனார் மரியாதைன்னு புதுசா ஒண்ணு கண்டுபுடிச்சி ஒரு லட்ச ரூபாய்க்கு நகை வாங்கியிருக்காங்க நாத்தனாருக்கு. இந்த கொடுமையெல்லாம் என்னன்னு சொல்ல.//

இது நல்ல ஐடியாவா இருக்கே , 0 % வட்டின்னு சொல்லிட்டு வண்டி விலையை ஏத்துற மாதிரி.

கல்கி said...

@ அக்பர்

வாங்க அக்பர்.

எல்லாம் வியாபாரமாத்தான் இருக்கு. என்ன செய்ய??

♫சோம்பேறி♫ said...

/* பொண்ணு/பையன் பாக்குறீங்களா? */

ஆமாங்க.. ஆனா என்னை தான் ஒரு பயவுள்லையும் பாக்க மாட்டெங்குது :(

கல்கி said...

@ ஷண்முகப்ரியன்

எங்க சார் விட்டாய்ங்க?? எனக்குத்தான் கொடுத்து வைக்கலியே :-) பொண்ணு பாத்ததுல இருந்து கல்யாண வரவேற்ப்பு வரைக்கும் முழுசா 3 வாரம்கூட இல்ல. அதான் இனிமே கல்யாணம் பண்ணுறவங்களுக்காவது உபயோகமா இருக்கட்டும்ன்னு இந்த இடுகை... :-)

கல்கி said...

@ சோம்பேறி

வாங்கண்ணே. பாக்குறாங்களா இல்லியான்னு பாக்குறதுக்கு உங்களுக்கு நேரம் இல்லைன்னு சொல்லுங்க. :-)

சிநேகிதன் அக்பர் said...

தங்களை தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.

http://sinekithan.blogspot.com/2009/06/blog-post_24.html

விக்னேஷ்வரி said...

கல்யாணத்துக்கு முன்னாடிதான் பையனுக்கு தம்/தண்ணி பழக்கமெல்லாம் இருக்கான்னு கேக்க முடியும். //

ஒரு முறை தோழியை பெண் பார்க்க வந்த பையன் அவளிடம் இந்த கேள்வியைக் கேட்டான். என்ன செய்ய, டெல்லியில் இதெல்லாம் சகஜம் என்பதால் அவன் கேட்டதை தவறாக நினைக்க முடியவில்லை.

என்னதான் அந்த பொண்ணு நல்லா சமைச்சாலும், எங்க அம்மா மாதிரி சமைக்கலன்னு சொல்லுறது ஒரு பேஷனாயிடுச்சு //

ரொம்ப சரியா சொன்னீங்க. கல்யாணம் ஆகி முப்பத்தஞ்சு வருஷம் கழிச்சும் எங்கப்பா எங்கம்மா கிட்ட இப்படித் தான் சொல்றாரு. ஆனா, இந்த விஷயத்துல என்னவர் ஓகே.

பொண்ணுங்களும் கேக்கலாம், அந்த பையனுக்கு சமையல் ஆர்வம் எல்லாம் எப்படின்னு. எப்பவாவது நம்மளால செய்ய முடியாத நேரத்துல உபயோகமா இருக்கும். //

Good Point :)

ஒவ்வொன்றும் அருமையான உபயோகமான டிப்ஸ். நல்லா அனாலிசிஸ் பண்ணிருக்கீங்க கல்கி.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

/ஒரு லட்ச ரூபாய்க்கு நகை வாங்கியிருக்காங்க நாத்தனாருக்கு//

அதுக்கு பேசாம பொண்ணுக்கே கொடுத்துவிடலாமே தல..,

கல்கி said...

வாங்க விக்கி,

//கல்யாணம் ஆகி முப்பத்தஞ்சு வருஷம் கழிச்சும் எங்கப்பா எங்கம்மா கிட்ட இப்படித் தான் சொல்றாரு. ஆனா, இந்த விஷயத்துல என்னவர் ஓகே//

நீங்க லக்கின்னு தான் சொல்லணும் :-)

கல்கி said...

@ SUREஷ் (பழனியிலிருந்து)

வாங்கண்ணே,

அட பொண்ண மட்டும் கொடுத்தா போதும்ன்னு சொன்னதும் நம்ம வீட்டுல அப்படியேவா அனுப்பிடுறாங்க. பசையுள்ள வீட்டுல போய்தான நம்ம ஆளுங்க ஒண்ணும் வேணாம்ன்னு சொல்லுவாங்க. நாத்தனருக்கும் சீர் செய்யிறது நான் கேள்விப்பட்டதில்ல.. அதான் குறிப்பிட்டேன்

குறை ஒன்றும் இல்லை !!! said...

பொண்ணுக மனசு.......

கல்கி said...

@ குறை ஒன்றும் இல்லை

வாங்க குறை ஒன்றும் இல்லை!
:-)

Post a Comment