Friday, April 10, 2009

எங்கள் வீட்டில் முதல் பிறந்த நாள்...!!!

ஒரு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி:

பக்கத்து ஊர்ல இருந்த ஒரு நண்பரோட குழந்தையின் முதல் பிறந்த நாள். செமத்தியா கொண்டாடியிருந்தாங்க.... எனக்குத்தான் ரொம்ப ஆச்சர்யம்.... நண்பரோட மனைவிகிட்ட கேட்டேன், எப்படி இவ்ளோ அயிட்டம்ஸ் ஒரே ஆளா செஞ்சீங்க....? அதெல்லாம் செஞ்சிடலாங்க... உங்க வீட்டுல முதல் பொறந்தநாள் வரும்போது நீங்களும் செய்வீங்க பாருங்க... அவங்களோட பதில்தான் கொஞ்சம் உசுப்பேத்திவிட்டுடுச்சு....

இப்போ:

இது எங்கள் வீட்டில் கொண்டாடப்போகும் முதல் பிறந்த நாள்.
ஏதாவது ஸ்பெஷலா செய்யலேன்னா வரலாறு நம்மள தப்பா பேசிடுமே.... அதனால எளிமையா கொண்டாடலாம்ன்னு சங்கத்துல முடிவெடுத்தோம்.


பெர்த்டே பேபிக்கு ரொம்ப கூச்ச சுபாவம், அதனால ஒரே ஒரு குடும்ப நண்பரையும் அவர் மனைவியையும் மட்டும் அழைப்பது என்று முடிவாயிற்று. (இந்த ஊர்ல எங்களுக்கு தெரிஞ்சதே 2 குடும்பங்கள்தான் :-) )


முதல்ல வீட்ட சுத்தம் பண்ணனுமே. ரெகுலரா சுத்தம் பண்ண வீடுதானன்னு நம்பி களத்துல எறங்கிட்டேன். சோபால இருக்குற டெகரேட்டிவ் பில்லோ, சீட் எல்லாத்தையும் எடுத்தா, கிச்சன்ல இருக்க வேண்டிய பாதாம் பருப்புல ஆரம்பிச்சு, பேனா, பர்ஸ்ல இருக்கவேண்டிய பைசாக்கள், குப்பைத்தொட்டில இருக்கவேண்டிய சாக்லேட் பேப்பர் வரைக்கும் வஞ்சனை இல்லாம இருந்தது.


இந்த சோபா வீட்டுக்கு வந்து 2 மாசம் கூட ஆகல.... :-( உபயம்: பெர்த்டே பேபி.


அடுத்து கட்டிலுக்கு அடியிலும் இதே கதைதான். எக்ஸ்ட்ராவாக கொஞ்சம் ஆரஞ்சு பழ தோலும் காலியான கோக் கேன்களும்.
மத்த நாளா இருந்தா ஏதாவது சொல்லலாம். பெர்த்டே சமயமாச்சே....அதனால் மூச்ச்ச்ச்ச்.................ஒரு வழியா வீட்டை சுத்தம் செஞ்சு முடிக்கும் போதே மணி 3 ஐ தாண்டிடுச்சு... இனிதான் ஸ்வீட் ஏதாவது செய்யணும்... நம்ம ஊரா இருந்தா கடைல வாங்கிட்டு வீட்டுல பண்ணதா சீன் போட்டுடல்லாம்...இப்போ அதுக்கும் வழி இல்ல...


எனக்கு செய்யத்தெரிஞ்ச ஒரே இனிப்பு, குலோப் ஜாமூன் மட்டும் தான். திடீர்ன்னு குலோப் ஜாமூன் மிக்ஸ்க்கு எங்க போறது..? எப்பவோ ஏதோ இணையத்துல ஆல் பர்ப்பஸ் மாவுல பண்ணலாம்னு படிச்ச நியாபகம்... அரகுறையா நியாபகம் இருந்தத வச்சு செய்ய ஆரம்பிச்சேன்... இது மாதிரி ஒரு குலோப் ஜாமூன நான் என் வாழ்க்கைல பாத்ததில்ல... அப்படி ஒரு குலோப் ஜாமூன்.


அதுக்காக நாங்க விட்டுருவோமா... அடுத்தது வீட்டுல இருக்குறத வச்சு ஏதாவது பண்ணலாம்ன்னா... நான் செஞ்ச பாதாம் அல்வா கிட்டத்தட்ட 1 மாசமா அப்படியே இருக்குறது நியாபகம் வந்தது... திரும்ப அது மாதிரி ஸ்வீட்ஸ் செஞ்சு அசிங்கப்படவேண்டமேன்னு யோசிக்க ஆரம்பிசேன்....


கொஞ்ச நேரத்துல பல்பு எரிஞ்சு, லட்டு பண்ணலாம்ன்னு முடிவுக்கு வந்தேன்... (இன்னும் நீ திருந்தலயான்னு கேக்குரீங்களா???)
ஒரு வழியா செஞ்சு முடிச்சு உருண்டையும் புடிச்சி வச்சாச்சு....


நம்ம பெர்த்டே பேபிக்குத்தான் கிச்சன்ல வர்ற வாசனைய வச்சே ஏதோ செஞ்சிருக்கோம்ன்னு தெரிஞ்சிடுமே.... சர்ப்ரைசா லட்டு கொடுத்தாதான் நல்லா இருக்கும்.. அதனால கொஞ்சம் பஜ்ஜியும் செஞ்சி முடிச்சாச்சு...
ஒரு 5 நிமிஷத்துல பெர்த்டே பேபி வீட்டுக்கு வந்தாச்சு. வந்ததும் கேட்டது, என்ன சமச்ச???? வாசன வருது???


மறுநாள் பிறந்தநாள்,
12 மணிக்கு லட்டு கொடுத்ததும் பார்க்க வேண்டுமே முகத்தை...."எனக்குத் தெரியும்.... அப்பவே நெய் வாசன வந்தது..:-) "


காலையில் கோவிலுக்கு போவது என்று நானும் நண்பரின் மனைவியும் ஏற்கனவே முடிவெடித்திருந்தோம். காலையில் சமைத்து எடுத்துச் சென்று அங்கே கோவிலுக்கு அருகில் இருக்கும் பூங்காவில் சாப்பிடுவது என்று.. கோவிலில் இருக்கும் உணவகத்தில் காலை சாப்பிட்டுக்கொள்ளலாம் என்பது திட்டம்....


அதிகாலையில் ஆரம்பித்த சமையல், ஒரு 9 மணி வாக்கில முடிந்தது..... புதினா சாதம், தயிர் சாதம், உருளைக்கிழங்கு,தயிர் பச்சடி, ஊறுகாய், என எல்லாத்தையும் டப்பாக்களில் வைத்துவிட்டு கிளம்பும்போது 11 ஆகி விட்டது...
கோவில் எங்கள் வீட்டில் இருந்து 30 மைல் தூரம். ரொம்ப நெரிசல் இல்லாததால் 11.30க்கு போய் சேர்ந்துவிட்டோம்...
முதலில் போய் வெங்கிக்கு ஒரு ஹாய் சொல்லலாம் என்றால் அவருக்கு மேக்கப் நடந்து கொண்டு இருந்தது.... இன்னும் 45 நிமிடம் ஆகலாம் என்றார்கள்... அதனால் போய் சிம்பிளாக ஒரு சாம்பார் சாதமும் தயிர் சாதமும் வெட்டிவிட்டு , கோவிலின் மத்த இடங்களை சுத்திப்பார்த்துவிட்டு வந்தால் இன்னும் வெங்கி பிஸி... கொஞ்ச நேரம் காத்திருந்த பின் தரிசனம்...புகைப்படங்கள் எல்லாம் வேண்டிய அளவு எடுத்துவிட்டு பூங்காவுக்கு செல்லலாம் என்றால், பயங்கர வெயில்... நாங்கள் எதிர்பார்த்தது போல் இல்லாமல் மலைகளாக மட்டும் இருந்தது.. நானும் நண்பரின் மனைவியும் மலை ஏறுவதற்கோ, அல்லது நெடுந்தூரம் நடப்பத்ற்கோ ஏதுவாக உடை அணியாததால் வீட்டுக்கு திரும்புவது என்று முடிவாயிற்று...அப்புறம் டப்பாவில் இருந்த சாப்பாடு வீட்டில் தான் சாப்பிடவேண்டும் என்று வெங்கியின் உத்தரவு...
அதனால் ஒரு 3 மணிக்கு சாப்பிட்டு தூங்கியவர்கள்தான் 7 மணி போல்தான் நியாபகம் வந்தது, 4 மணிக்கு ஸ்னோ பால், 8 மணிக்கு டின்னர், 9 மணிக்கு மூவி எல்லாம்......
வடிவேலு அண்ணன் சொல்லுவது போல்... எதையுமே நல்லா பிளான் பண்ணி செய்யணும். இல்லேன்னா இப்படித்தான்.பி.கு1: குலோப் ஜாமூன் செய்ய ஆல் பர்பஸ் கூட மில்க் பவுடர், கோவா எல்லாம் சேக்கணும் போல.. நான் சரியா கவனிக்காததால சொதப்பிடுச்சு... ஹி ஹி ஹி... :-)


பி.கு2: எங்க கல்யாணம் நடந்து முதல் பிறந்தநாள் என் கணவருக்கு.... :-)பி.கு3: என்னதான் பிளான் சொதப்பிட்டாலும் நான் காலைல எந்திரிச்சு சமைச்சதே அவருக்கு சந்தோஷம்... வீட்டுல இருக்குற மாதிரி அன்னைக்குத்தான் தோணியிருக்காம். (அஸ்க்கு புஸ்க்கு இப்படியெல்லாம் ஐஸ் வச்சா நாங்க காலைல சமைச்சிருவோமா?? உங்களுக்கு எப்பவும் corn flacks தான்) :-)

7 comments:

பழமைபேசி said...

அடடா, ரொம்ப நல்லா தொய்வில்லாம எழுதி இருக்கீங்க...

குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்லிடுங்க!!

கல்கி said...

நன்றி பழமைபேசி,

பதிவை படிச்சதுக்கும், வாழ்த்தியதற்க்கும். :-)

பி.கு எல்லாம் படிச்சிட்டீங்கள்ள.....:-)

பழமைபேசி said...

//கல்கி said...
நன்றி பழமைபேசி,

பதிவை படிச்சதுக்கும், வாழ்த்தியதற்க்கும். :-)

பி.கு எல்லாம் படிச்சிட்டீங்கள்ள.....:-)
//

எல்லாமே படிச்சாச்சுங்க... எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கு....அதாவது தமிழ்பிழைகளைக் கண்டா சொல்றது.... பொறுத்துகுங்க என்ன? இஃகிஃகி!!

//வாழ்த்தியதற்க்கும்//

வாழ்த்தியதற்கும்

//படிச்சிட்டீங்கள்ள//

படிச்சிட்டீங்கள்ல?

Sasirekha Ramachandran said...

//குலோப் ஜாமூன் செய்ய ஆல் பர்பஸ் கூட மில்க் பவுடர், கோவா எல்லாம் சேக்கணும் போல.. நான் சரியா கவனிக்காததால சொதப்பிடுச்சு... ஹி ஹி ஹி... :-)//

nenachen!!yen ipdi????
paavandhan b'day baby!!!

ஷண்முகப்ரியன் said...

இயல்பான நகைச் சுவை.நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.வாழ்த்துகள்.

sarathy said...

// மத்த புள்ளைங்க எல்லாரும் ஏதோ கல்யாணமாகி போற மாதிரி கண்ணுல தண்ணியோட டாடா பைபை சொல்லிட்டு இருந்தாங்க. நம்ம கண்ணுல அப்பிடி தண்ணி ஏதாவது தெரியுதான்னு அம்மாவும் அப்பாவும் உத்து பாத்தும் அப்படி ஒண்ணும் தெரியல போல.. //

// கொஞ்ச நேரத்துல பல்பு எரிஞ்சு, லட்டு பண்ணலாம்ன்னு முடிவுக்கு வந்தேன்... //

//முதலில் போய் வெங்கிக்கு ஒரு ஹாய் சொல்லலாம் என்றால் அவருக்கு மேக்கப் நடந்து கொண்டு இருந்தது //

// நம்ம பெர்த்டே பேபிக்குத்தான் கிச்சன்ல வர்ற வாசனைய வச்சே ஏதோ செஞ்சிருக்கோம்ன்னு தெரிஞ்சிடுமே //

நல்லா சொல்லி இருக்கீங்க...
தொடர்ந்து எழுதுங்க..
நிறைய எதிர்பார்க்கிறோம்...

கல்கி said...

நன்றி சாரதி..

Post a Comment