Wednesday, March 25, 2009

முதல் நாள் கல்லூரி அனுபவம்...

முதல் நாள் கல்லூரி அனுபவம்...

முதல் நாள், எப்போ தூக்கத்துல எழுப்பி கேட்டாலும் இந்த தேதிய சொல்லமுடியும். ஏன்னா என்னோட பொறந்த நாளுல தான் இந்த காலேஜ்ல கால எடுத்து வச்சேன்.
காலேஜ் அட்மிஷன் போட்டுட்டு, ஹாஸ்டல்லயும் போய் ஒரு துண்டைப் போட்டு எடத்தைப் புடிசாச்சு.
முதல் நாள் inauguration function, கொஞ்சம் மிரண்டுதான் போயிருந்தேன். பின்ன வாட்ச்மேன்ல இருந்து பக்கத்து சீட்ல உக்காந்திருந்த பொண்ணுவரைக்கும் எல்லாரும் இங்கிலிஷ்ல என்ன கிழிச்சா நான் மிரளாம என்ன செய்ய? நமக்கு தெரிஞ்ச ஒரே இங்கிலிஷ் வாட் இஸ் யுவர் நேம் தான்.
நேரம் ஆக ஆக நாம இருக்குறது தமிழ்நாட்டுலயா இல்ல வேற எங்கயாவதானு கொஞ்சம் சந்தேகமாதான் இருந்தது. கல்லூரியோட வரலாறு புவியியல்ன்னு எல்லாத்தையும் சொன்னதுக்கப்புறம் சீனியர்ஸ் பாட்டெல்லாம் போட்டு கலக்கிட்டு இருந்தாங்க... ஆனா மருந்துக்குகூட ஒரு தமிழ் பாட்டு போடல. இந்த அக்கப்போர்ல இருந்து தப்பிச்சு ஒரு வழியா ஹாஸ்டல் ல போய் விழுந்தாச்சு.
சாயந்திரம் எல்லரோட அம்மா அப்பால்லாம் கிளம்புனாங்க...மத்த புள்ளைங்க எல்லாரும் ஏதோ கல்யாணமாகி போற மாதிரி கண்ணுல தண்ணியோட டாடா பைபை சொல்லிட்டு இருந்தாங்க. நம்ம கண்ணுல அப்பிடி தண்ணி ஏதாவது தெரியுதான்னு அம்மாவும் அப்பாவும் உத்து பாத்தும் அப்படி ஒண்ணும் தெரியல போல.. ரொம்ப சோகமா, அப்போ நாங்க கிளம்புறோம்ன்னு சொன்னாங்க... சரி டாடா பைபை சொல்லிட்டு ரூம்க்கு வந்தா எல்லாரும் கண்ணெல்லாம் வீங்கி உக்காந்துட்டு இருந்தாங்க....சரி இங்க நம்மள மாதிரி ஊர்க்கார புள்ளைக தான இருக்கும்ன்னு நம்பி பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துவச்சிட்டு கட்டில்ல உக்காந்தா ஒரு கொரலு.... "ஹாய் கேல்ஸ் ஐ அம் நிஷா" என்றது.. 
என்கிட்ட கேக்காமலே அந்த ரூம்ல புது சட்டம் இனிமே இங்கிலிஷ்ல தான் பேசணும்னு, அப்போதான் கடைசி வருஷம் கேம்பஸ் வரும் போது நல்லா பேச முடியுமாம்... அட பாவிங்களா நான் எவ்ளோ நாள் தான் மௌன விரதம் இருக்குறது...., அப்போதான் தெரிஞ்சது நம்மள தவிர எல்லாரும் இங்கிலிஷ் மீடியம்னு...
நான் முழிக்கிறதப்பாத்து பக்கத்துல இருந்த மதுரக்கார புள்ள, பயப்படாத இது எல்லாம் ரெண்டு நாளைக்கு கூட யாரும் பேச மாட்டாங்க என்றதும் தான் திரும்ப பொட்டிய கட்டலாம்ன்ற எண்ணத்த மாத்திகிட்டேன்.
அந்த பொண்ணு சொன்னது மாதிரி ஒரு நாள் கூட யாரும் இங்கிலிஷ் ல பேசல. அங்கே பாதி பேர் பேசினத பாத்தப்போ அண்ணாமலை படத்துல ஜனகராஜ் சார் பேசுற இங்கிலிஷ் தான் நியாபகம் வந்தது. நம்மளும் இங்க வண்டிய ஓட்டிடலாம்ன்னு நம்பிக்கையும் வந்தது. இருந்தாலும் பீட்டர் விட்டு பழக்கம் இல்லாததால கொஞ்சம் கூச்சமாத்தான் இருந்தது.

இனி நாங்க கேங் சேத்துகிட்டு பண்ணுன லொள்ளுஸ் எல்லாம் வேற பதிவுல சொல்லுறேன்.

7 comments:

Sasirekha Ramachandran said...

ha ha ha...one of the unforgettable moments in life!!keep writting.

கல்கி said...

சசி அக்கா,

வருகைக்கு நன்றி. ஊக்குவிப்பதற்க்கு சிறப்பு நன்றி :)

பழமைபேசி said...

பதிவுலகத்துக்கு அடி எடுத்த வைத்த உங்களுக்கு வாழ்த்துகள்!

பழமைபேசி said...

And few suggestions from me.

1. Kindly disable word verification in comments section as that doesn't add any value

2. Could you please format the content while posting the content?

Thank you and Enjoy Blogging!!!

கல்கி said...

நன்றி பழமைபேசி,

//1. Kindly disable word verification in comments section as that doesn't add any value//

இத மாத்தியாச்சு... :-)

//2. Could you please format the content while posting the content?//

கொஞ்சம் கொஞ்சமா பண்ணிரலாம்.. :-)

எம்.எம்.அப்துல்லா said...

ஹைய்யோ!!!!! என் கதை மாதிரி அப்படியே இருக்கு!!!

கல்லூரி முதல்நாள் வகுப்பில் ”வாட்ஸ் யுவர் ஃபாதர்??” அப்பிடின்னு எச்.ஓ.டி. கேட்டப்ப ”மை ஃபாதர் நேம் இஸ் இஸ்மாயில்னு” பெருமையா சொன்னேன். :)

எனிவே வெரி கிரேட் ரைட்டிங் :))))

கல்கி said...

@ எம்.எம்.அப்துல்லா

வாங்கண்ணே... ஊக்கப்படுத்துறதுக்கு ரொம்ப நன்றிண்ணே

Post a Comment